பிரித்தானிய தலைமை மருத்துவ ஆலோசகரை அசிங்கப்படுத்திய சிறுவன்! அதிர்ச்சியூட்டும் டிக்-டொக் வீடியோ

by Lifestyle Editor
0 comment

பிரித்தானியாவின் தலைமை மருத்துவ ஆலோசகரான கிறிஸ் விட்டியை சிறுவன் ஒருவன் டிக்-டொக்கில் அசிங்கப்படுத்திய வீடியோ வைரலாகிவருகிறது.

நேற்று சமூக ஊடகமான டிக்-டொக்கில் ஒரு வீடியோ பிரித்தானியா முழுவதும் வைரலானது.

அதில் நாட்டின் தலைமை மருத்துவ ஆலோசகரான Chris Whittyயை ஒரு சிறுவன் Victoria Station அருகே உள்ள Strutton Ground Marketல் பின்தொடர்ந்து, அவரை நிற்க வைத்து தனது டிக்-டொக் வீடியோ பதிவு செய்துள்ளான்.

அந்த வீடியோவில் கிறிஸ் விட்டியை “பொய்யர், இங்கு நின்று கொண்டிருக்கும் மனிதர் ஒரு பொய்யர்” என்று குற்றம் சாட்டியுள்ளான். கிறிஸ் வேறு வழியில்லாமல் அந்த இடத்தில் அமைதியாக எதுவும் செய்யாமல் நின்றுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த பிரித்தானிய சுகாதார செயலாளர் Matt Hancock, “கிறிஸ் விட்டி சிறந்த புகழ்பெற்ற விஞ்ஞானி, அவர் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும் கிறிஸ் வீட்டிக்கு இது மிகவும் பரிதாபமான நிலை என்று கூறிய அவர், சிறுவனின் இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.

Related Posts

Leave a Comment