போலி மணல் தயாரித்து விற்பனை…

by Lifestyle Editor
0 comment

சேலம்

ஆத்தூர் அருகே கிராவல் மண்ணில், போலி மணல் தயாரித்து விற்பனை செய்த 12 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 100 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக போலி மணல் விற்பனை நடைபெறுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஆத்தூர் வட்டாட்சியர் அன்புச்செழியன் தலைமையில், தலைவாசல் அடுத்த மணிவிழுந்தான் கிராமத்தில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, ராமசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சிலர் சட்டவிரோதமாக கிராவல் மண்ணை திருடி வந்து, அவற்றை இயந்திரம் மூலம் தூளாக்கி போலி மணல் தயாரிப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, போலி மணல் தயாரிப்பில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சதீஷ் மற்றும் கேரளாவை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 100 யூனிட் போலி மணலையும் பறிமுதல் செய்தனர்.

Related Posts

Leave a Comment