‘இரண்டாம் தலைமுறை’ தடுப்பூசியை தயாரிக்கவுள்ள பிரித்தானிய- ஜேர்மன் நிறுவனம்

by Lifestyle Editor
0 comment

புதிய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிராக பயனளிக்கக்கூடிய ‘இரண்டாம் தலைமுறை’ தடுப்பூசிகளைத் தயாரிக்க பிரித்தானிய- ஜேர்மன் நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளன.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. வல்லரசுகள் உட்பட அனைத்து நாடுகளும் கொரோனாவின் பிடியிலிருந்து மீள திணறிவருகின்றன.

அனைத்து நாடுகளும் தற்போது தடுப்பு மருந்துகளை மட்டுமே நம்பியுள்ளன. உலகம் முழுக்க பல நிறுவனங்கள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்திட்டுள்ள நிலையில், தற்போது பல நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன.

இதற்கிடையில், வைரஸும் உருமாற்றம்மடைந்து வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் மிகவும் ஆபத்தான வெவ்வேரு உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பிரேசிலில் ஒரு புதிய வகை வைரஸ் பரவ தொடங்கியது.

தற்போது பிரித்தானிய வகை வைரஸ் மீண்டும் ஒரு உருமாற்றம் அடைந்துள்ள நிலையில், உலகளவில் விஞ்ஞானிகளை கவலையில் ஆழ்த்தியது. காரணம், புதிதாக உருமாற்றமடைந்த வைரஸ்கள் எதுவும் தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரித்தானிய மருந்து தயாரிப்பாளரான GlaxoSmithKline (GSK) மற்றும் ஜேர்மனியின் CureVac ஆகியவைஇணைந்து கோவிட்-19 இன் உருமாறிவரும் வகைகளை குறிவைத்து அடுத்த தலைமுறை தடுப்பூசிகளைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளன.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “முதல் தலைமுறை COVID-19 தடுப்பூசிகளின் செயல்திறனைக் குறைக்கும் ஆற்றலுடன் வளர்ந்து வரும் மாறுபாடுகளின் அதிகரித்துள்ளது. அதனால் இந்த ‘அடுத்த தலைமுறை’ COVID-19 தடுப்பூசிகள் இதற்கு முன்னர் தடுப்பூசி போடப்படாத நபர்களைப் பாதுகாக்க பயன்படுத்தப்படலாம் அல்லது ஆரம்ப தடுப்பூசியிலிருந்து பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் குறையும் பட்சத்தில் பூஸ்டர்களாக பயன்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு 100 மில்லியன் டோஸ் வரை தயாரிக்க GSK – CureVac நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

Related Posts

Leave a Comment