என்னது பாலா மாமாவா?… விடாமல் துரத்திய ரசிகை! அன்பு கேங்கின் பரிதாப ரியாக்ஷன்

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். இந்நிலையில் 106 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடக்கும் பிக்பாஸ் கொண்டாட்டத்தை தான் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் கொண்டாட்டத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

அதிலும் அங்கே எடுத்த புகைப்படங்கள் மற்றும் நினைவுகளை போட்டியாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கொண்டாட்டம் வரும் ஞாயிறு மதியம் 1.30க்கு ஒளிபரப்பாக இருக்கின்றது.

பல ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்த பாலா, தற்போது ரசிகைகளின் அன்பு மழையில் நனைந்துள்ளார். இதில் பாலாவைத் தவிர வேறு கவிதை எழுத தெரியவில்லை என்றும் பாலாவை மாமா என்றும் ரசிகைகள் அழைத்து அவரை குஷிப்படுத்திய காணொளியை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.

இதில் அன்பு கேங்க் அர்ச்சனா மற்றும் ரியோவின் ரியாக்ஷன் வேற லெவலில் இருந்துள்ளது.

Related Posts

Leave a Comment