இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் நட்சத்திர வீரருக்கு கொரோனா!

by Lifestyle Editor
0 comment

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மற்றும் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமன்னே ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஊழியர்கள், வலை பந்து வீச்சாளர்கள் மற்றும் HPC ஊழியர்கள் என 36 பேர் கொண்ட அணிக்கு நேற்று பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டன.

சோதனையில் ஆர்தர் மற்றும் லஹிரு திரிமன்னேவுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது என இலங்கை கிரிக்கெட் (SLC) தெரிவித்துள்ளது.

தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்ட உடனேயே மிக்கி ஆர்தர் மற்றும் லஹிரு திரிமன்னே ஆகியோர் கொரோனாவுக்காக வகுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் சுகாதார நெறிமுறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டனர் என SLC கூறியுள்ளது.

எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க இலங்கை தேசிய அணி தயாராகி வந்தது.

36 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஜனவரி 29 ஆம் திகதி, 3 குழுக்களாகவும், வெவ்வேறு கால கட்டங்களிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சிகளைத் தொடங்கியது.

தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, பிப்ரவரி 20 ஆம் திகதி தொடங்கவிருந்த மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தை மறுசீரமைப்பதற்கான சாத்தியத்தை ஆராய்ந்து வருவதாக SLC தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment