32 பேர் பரிதாப பலி! இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு நேர்ந்த கோரம்: நெஞ்சை உருக்கும் புகைப்படம்

by Lifestyle Editor
0 comment

உகாண்டாவில் சவப்பெட்டியுடன் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களை ஏற்றிச் சென்ற லொறி, கார் மற்றும் மூன்று வாகனங்கள் மீது மோதியதில் 32 பேர் பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு உகாண்டாவில் Kasese அருகே இந்த கோர விபத்து இடம்பெற்றதாக செஞ்சிலுவை சங்க செய்தித் தொடர்பாளர் Irene Nakasiita தெரிவித்துள்ளார்.

சவப்பெட்டியுடன் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களை ஏற்றி அதிகச்சுமையுடன் வந்த டிரக், கார் மற்றும் மூன்று வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

சாலை சிறியதாக உள்ளது, அதில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது மற்றும் சம்பவத்தின் போது இருட்டாக இருந்தது என Irene Nakasiita விபத்திற்கான காரணங்களை விளக்கினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, Kasese-விலிருந்து வந்த இரண்டு லொறிகள் விபத்துக்குள்ளான இடத்திலிருந்த வாகனங்கள் மீது மோதியது.

மூன்றாவதாக எதிர் திசையில், Bundibugyo இருந்து வந்த வாகனமும் மோதி கவிழ்ந்தது என Irene Nakasiita தெரிவித்தார்.

இறந்தவர்களை கொண்டு செல்ல செஞ்சிலுவை சங்க ஊழியர்களும், தன்னார்வலர்களும் உகாண்டா படையினருடன் இணைந்து பணியாற்றி, உயிரிபிழைத்த ஐந்து பேரை காப்பாற்றினர் என Irene Nakasiita தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment