ரஷ்யாவின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கவுள்ள இந்தியா

by Lifestyle Editor
0 comment

ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசிக்கு இந்தியா அங்கீகாரம் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா அவசரகால பயன்பாட்டிற்காக ஏற்கெனவே இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஜனவரி மாத நடுப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது.

மேலும், ஆகஸ்ட் மாதத்திற்குள் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய திட்டத்தை இந்தியா செயல்படுத்திவருகிறது.

இந்த நிலையில், இந்தியா இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்திற்குள் ரஷ்யாவின் Sputnik V கொரோனா தடுப்பூசியை அவசரகால தடுப்பூசியாக அங்கீகாரம் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா Sputnik V தடுப்பூசி தயாரிப்பில் முக்கிய கூட்டாளி என்றும் இந்த தடுப்பூசியை இந்தியா அதன் அவரையறைப்படுத்தப்பட்ட தடுப்பூசியாக பயன்படுத்த அங்கீகாரம் அளிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதித் தலைவர் கிரில் டிமிட்ரிவ் கூறியுள்ளார்.

அங்கீகாரம் அளிக்கப்பட்டதும் உடனடியாக விநியோகம் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஸ்பூட்னிக் வி 91.6% பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment