பிரபல ரிவியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற பாலாஜியின் தந்தையின் இறப்பிற்கு ஆரி போட்ட கருத்திற்கு ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்தார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் அதிலும் அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது.
அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு நிலையில் பாலாஜியின் தந்தை உடல் நலக் குறைவால் காலமாகியுள்ளார். தந்தையின் இறுதி சடங்கில் பாலாஜி கண்ணீரோடு இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் இருக்கும் பரவி வருகிறது.
மேலும், தந்தையின் இறப்பை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாலாஜி ‘இதுவும் கடந்து போகும்’ என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தான் அனிதாவின் தந்தை காலமாகி இருந்தார்.
This too shall pass
— Balaji Murugadoss (@OfficialBalaji) February 2, 2021
அதே போல கடந்த ஆண்டு பிக் பாஸ் போட்டியாளர்களான முகேன் மற்றும் லாஸ்லியாவின் தந்தை காலமாகி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலாஜியின் தந்தை இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஆரி, பாலாஜியின் தந்தை குறித்து உருக்கமான ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
குறித்து பாலாஜி முருகதாஸின் தந்தையின் மறைவைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த கடினமான தருணங்களில் குடும்பத்திற்கு பலமும் தைரியமும் பெறட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Deeply saddened to hear the demise of Balaji Murugadoss’s Father.. May the family have the strength and courage in these tough moments.
— Aari Arjunan (@Aariarujunan) February 2, 2021