ரொம்பவே ஷாக் ஆகிட்டேன்.. சித்ராவின் மரணத்தை பற்றி முதன் முறையாக பேசிய ரம்யா பாண்டியன்!

by News Editor
0 comment

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை டிசம்பர் விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார்.

மேலும், இந்த வழக்கில் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் சித்ராவின் மறைவு குறித்து ரம்யா பாண்டியன் உருக்கம் தெரிவித்துள்ளார்.

அதில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்த ரம்யாவிடம் மறைந்த நடிகை சித்ராவை பெற்றி கேட்டபோது அவர், எனக்கு அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியாது.

நான், சந்தித்ததும் இல்லை.. அந்த விஷயத்தை கேட்டவுடன் ரொம்பவே அதிர்ச்சியாகவும், கவலையாகவும் இருந்தது.

எங்க அம்மா அவங்க சீரியலை அதிகமாக பார்ப்பாங்க.. எனக்கு வருத்தமாக இருக்கு.. அவங்க குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment