இலங்கையில் 65 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

by Lankan Editor
0 comment

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 715 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் திவுலபிட்டிய – பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 705 ஆக உயர்ந் துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 698 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 6 ஆயிரத்து 325 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 59, 043 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment