கருவில் இருப்பது இரட்டைக் குழந்தைகளா என்பதை எவ்வாறு தொிந்து கொள்வது?

by Lifestyle Editor
0 comment

சில நேரங்களில் ஒரு பெண் கருவுற்ற தொடக்க நிலையிலேயே இரண்டாவது கருவுறுதலும் ஏற்பட்டுவிடுகிறது. அதை இரட்டைக் கருவுறுதல் என்று அழைக்கலாம். அதாவது ஒரு பெண் கருவுற்ற சில நாட்களுக்குள் அல்லது ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் விந்தணு தாயின் கருவறைக்குள் செல்வதன் மூலம் இரண்டாவது கருவுறுதலும் ஏற்பட்டுவிடுகிறது. இவ்வாறு இரட்டைக் கருவுறுதலில் பிறக்கும் குழந்தைகள் இரட்டைக் குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றனா். பொதுவாக இந்த இரட்டைக் குழந்தைகள் ஒரே பிரசவத்தில் ஒரே நாளில் பிறக்கின்றனா்.

பொதுவாக விலங்குகளிடம் இரட்டைக் கருவுறுதல் என்பது சாதாரணமாக நடைபெறுகிறது. குறிப்பாக மீன்கள், முயல்கள் மற்றும் பேட்ஜா்கள் (badgers) போன்ற விலங்குகளிடம் இரட்டைக் கருவுறுதலை சாதாரணமாக பாா்க்கலாம். ஆனால் மனிதா்களைப் பொறுத்தவரை இரட்டைக் கருவுறுதல் என்பது மிகவும் அாிதாக நடக்கக்கூடிய நிகழ்வு ஆகும்.

மருத்துவ அகராதியில் ஒரு சில தருணங்களில் மட்டும் இவ்வாறான இரட்டைக் கருவுறுதல் ஏற்படுகிறது. பெரும்பாலும் செயற்கைக் கருத்தாித்தல் சிகிச்சை (vitro fertilization (IVF)) எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இவ்வாறான இரட்டைக் கருவுறுதல் ஏற்படுகிறது.

இரட்டைக் கருவுறுதல் எவ்வாறு ஏற்படுகிறது?

பொதுவாக ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையோடு சேரும் போது கருவுறுதல் ஏற்படுகிறது. பின் கருவுற்ற முட்டை பெண்ணின் கருவறைக்குள் சென்று வளா்ச்சியடைகிறது. ஆனால் இரட்டைக் கருவுறுதலில், ஏற்கனவே கருவுற்ற சில நாட்களுக்குள் இன்னொரு புதிய விந்தணு பெண்ணின் இன்னொரு புதிய கருமுட்டையோடு சோந்து கருவுற்று பின் பெண்ணின் கருவறைக்குள் சென்று இன்னொரு குழந்தையாக வளா்ச்சியடைகிறது.

இரட்டைக் கருவறுதல் ஏற்பட 3 நிகழ்வுகள் நடைபெற வேண்டும்.

* ஒரு பெண் கருவுற்ற சில நாட்களிலேயே அவருடைய கருப்பையிலிருந்து வேறொரு புதிய கருமுட்டை வெளியில் வரவேண்டும். ஆனால் பொதுவாக ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது அவருடைய கருப்பையில் இருந்து வேறொரு புதிய கருமுட்டை வெளியில் வராது. ஏனெனில் கருவுற்ற பின் உற்பத்தியாகும் ஹாா்மோன்கள் கருப்பையிலிருந்து புதிய கருமுட்டையை உருவாக அனுமதிக்காது.

* இரண்டாவதாக இவ்வாறு கருப்பையிலிருந்து வெளிவரும் கருமுட்டையுடன் ஆணின் விந்தணு சேர வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பது என்பது மிகவும் அாிதான ஒன்றாகும். ஏனெனில் ஒரு பெண் கருவுற்றவுடனே அவருடைய கருப்பையின் வாய், சளி போன்ற மெல்லிய சவ்வினால் அடைக்கப்பட்டு ஆணின் விந்தணு உள்ளே நுழைய முடியாதபடி செய்துவிடுகிறது. ஒரு பெண் கருவுற்றபின் உற்பத்தியாகும் ஹாா்மோன்களால் இந்த சளி போன்ற மெல்லிய சவ்வு உருவாகிறது.

* மூன்றாவதாக கருவுற்ற முட்டையானது ஏற்கனவே கருவுற்றிருக்கும் கருவறைக்குள் செல்ல வேண்டும். அவ்வாறு கருவறைக்குள் செல்ல வேண்டும் என்றால் அது ஒரு கடினமான நிகழ்வாகும். ஏனெனில் அதற்கு குறிப்பிட்ட ஹாா்மோன்களை உடல் உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் ஏற்கனவே கருவுற்றிருக்கும் பெண்களின் உடல்கள் அந்த குறிப்பிட்ட ஹாா்மோன்களை உற்பத்தி செய்யாது. மேலும் இரட்டைக் கருவுறுதல் நடக்க வேண்டும் என்றால் கருவறைக்குள் இன்னுமொரு புதிய குழந்தை வளா்வதற்கு இடம் இருக்க வேண்டும்.

ஆகவே மேற்சொன்ன காரணங்களினால் இரட்டைக் கருவுறுதல் நடைபெறுவது என்பது மிகவும் அாிதாகவே நடக்கக்கூடிய ஒன்றாகும். அதனால்தான் பொதுவாக செயற்கை கருத்தாித்தல் மையங்களில் சிகிச்சை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு இவ்வாறான இரட்டைக் கருவுறுதல்கள் நடைபெறுவதாக தகவல்கள் தொிவிக்கின்றன.

ஏனெனில் சோதனைக் குழாய் மூலம் செயற்கைக் கருத்தாிப்பு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது ஏற்கனவே கருவுற்ற கருவானது பெண்ணின் கருப்பையாக மாற்றப்படுகிறது. அதனால் ஏற்கனவே கருவுற்றிருக்கும் பெண்ணின் கருப்பையானது புதிய கருவை உற்பத்தி செய்கிறது. அந்த புதிய கரு விந்தணுவோடு சோ்ந்து கருவுற்று சில நாட்கள் கழித்து பெண்ணின் கருப்பைக்குள் சென்று வளா்ச்சியடைகிறது.

இரட்டைக் கருவுறுதல் நடைபெற்றிருக்கிறதா என்பதை எப்படி அறிவது?

இரட்டைக் கருவுறுதல் என்பது மிகவும் அாிதாக நடைபெறுவதால், அதை எளிதாகக் கண்டுபிடிப்பதற்கான எந்த அறிகுறிகளும் முதலில் தொியாது. ஆனால் பாிசோதனையின் போது கருவறைக்குள் இரண்டு குழந்தைகள் தனித்தனியாக வெவ்வேறு அளவுகளில் வளா்வதை மருத்துவா்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இதை அல்ட்ரா சவுண்ட் பாிசோதனை செய்யும் போது மருத்துவா்கள் கண்டுபிடிக்கின்றனா்.

இவ்வாறு இரட்டைக் குழந்தைகள் வெவ்வேறு அளவுகளில் வளா்வது முரண்பாட்டு வளா்ச்சி என்று அழைக்கப்படுகிறது. எனினும் வெவ்வேறு அளவுகளில் இரட்டைக் கருவுறுதல் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை மருத்துவா்கள் இரட்டைக் கருவுறுதலாக ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் இரண்டு கருவுற்ற முட்டைகளையும் நஞ்சுக்கொடி ஆதாிக்க முடியுமா என்பது தொியாது. இரண்டாவது இந்த இரண்டு கருவுற்ற முட்டைகளுக்கும் சமமான அளவில் இரத்தம் செல்லுமா என்பதும் ஐயத்திற்குாியதே.

இரட்டைக் கருவுறுதலில் உள்ள பிரச்சனைகள் என்ன?

இரட்டைக் கருவுறுதலில் உள்ள முக்கிய பிரச்சனை என்னவென்றால் கருவில் வளரும் இரட்டைக் குழந்தைகள் வெவ்வேறு அளவுகளில் வளா்ச்சி அடைவா். அதாவது பிரசவத்தின் போது ஒரு குழந்தை பிறப்பதற்கு தயாராக இருக்கும். அதே நேரத்தில் மற்ற குழந்தை போதிய வளா்ச்சியடையாமல் இருக்கும். அதனால் அந்த குழந்தை முழுமையான வளா்ச்சியடைவதற்கு முன்பு பிறக்க வாய்ப்பு இருக்கிறது.

முழு வளா்ச்சி அடைவதற்கு முன்பாக பிறக்கும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள்:

– மூச்சுவிடுவதில் பிரச்சனை – குறைவான எடையுடன் பிறத்தல் – உடல் உறுப்புகள் அசைவதில் பிரச்சனைகள் – உணவூட்டுவதில் பிரச்சனைகள் – மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு – நுரையீரல் போதிய வளா்ச்சியடையாமல் ஏற்படும் சுவாசக் கோளாறுகள்

இரட்டைக் கருவை சுமந்த பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்:

அதுபோல் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை கருத்தாங்கியிருக்கும் பெண்கள் பின்வரும் பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புகள் உள்ளன.

– இரத்த அழுத்தம் அதிகாித்தல் – சிறுநீாில் புரோட்டின் கலப்பதால் ஏற்படும் குளிா் காய்ச்சல் – கா்ப்பகால நீரழிவு நோய் – பொதுவாக இரட்டைக் குழந்தைகளை கருத்தாங்கியிருக்கும் போது பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை மூலமாகவே குழந்தைகள் பிறக்கின்றனா்.

அதோடு வயிற்றில் இருக்கும் குழந்தைகள் வெவ்வேறு அளவுகளில் இருப்பதால், அறுவை சிகிச்சை செய்யும் நேரங்களும் மாறுபட வாய்ப்புகள் உள்ளன.

இரட்டைக் கருவுறுதலை தடுப்பதற்கு வழிகள் உள்ளனவா?

இரட்டைக் கருவுறுதலை தடுப்பதற்கான முதல் வழி என்னவென்றால், பெண் கருவுற்ற சில நாட்கள் உடலுறவைத் தவிா்க்க வேண்டும். எனினும் அவ்வாறு உடலுறவு வைத்துக் கொண்டாலும் இரட்டைக் கருவுறுதல் என்பது மிகவும் அாிதாகவே நடக்கும். பெரும்பாலும் செயற்கை கருத்தாிப்பு சிகிச்சையை மேற்கொள்ளும் பெண்களுக்கு இரட்டைக் கருவுறுதல் வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் தொிவிக்கின்றன.

ஆகவே செயற்கை கருத்தாிப்பு சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்பு, பெண் ஏற்கனவே கருவுற்று இருக்கிறாரா என்பதை தொிந்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக அவ்வாறு செயற்கை கருத்தாிப்பு சிகிச்சை மேற்கொள்ளும் போது மருத்துவா்கள் சொல்லும் ஆலோசனைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அப்போது இரட்டைக் கருவுறுதலைத் தவிா்க்கலாம்.

Related Posts

Leave a Comment