பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான லாஸ்லியா, அனிதா சம்பத்தை தொடர்ந்து பாலாஜி முருகதாஸும் தனது அப்பாவை இழந்து தவித்து வருகிறார்.
பாலாஜி முருகதாஸின் அண்ணன் ரமேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பாவின் இறப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.
இதுவும் கடந்து போகும் என பாலாஜி முருகதாஸ் ட்வீட் செய்ய அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட விமர்சனங்கள், விவாதங்கள், ரெட் கார்டு பிரச்சனைகள் எழுந்தபோதும், இறுதியில் ஆரிக்கு அடுத்த இடத்தில் 6 கோடிக்கும் அதிகமான ஓட்டுக்களை அள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தார் பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் வெற்றியை கொண்டாட கோவாவில் ஜாலியாக டூர் சுற்றலாம் என நினைத்த அவருக்கு தற்போது மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாலாஜி முருகதாஸின் அப்பா உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளதாக பாலாவின் அண்ணன் ரமேஷ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.