இந்திர தேவன் பெற்ற சாபமும், பெண்கள் மாதவிடாய் பெற்ற கதையும் !

by Lifestyle Editor
0 comment

இன்றைய உலகில் ஆண், பெண் பிரிவினை இல்லை என்ற வாக்கியத்தை மேற்கோடிட்டு காண்பித்துக் கொண்டே வாழ்ந்து கண்டிருக்கிறோம். பல வளர்ந்த நாடுகளிலும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளின் முன்னணி நகரங்களிலும் குறைந்த சதவீத வர்க்கிங் பெண்களை கணக்கில் கொண்டு, இன்னும் வெளியுலகம் காண்பிக்கப்படாத பெண்களையும் அதில் ஒட்டு மொத்தமாக கள்ள ஓட்டாக போட்டு நாம் வளர்ந்து விட்டதாகவும், பெண் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும் ஒரு கானல் நீரை உருவாக்கி வைத்துள்ளோம்.

முன்னணி நகரங்களில் ஆண்களுக்கு நிகராக பல பெண்கள் உழைத்தாலும், அவர்களுக்கான சமநிலை மதிப்பு அளிக்கப்படுகிறதா? பெண்களை நாம் முழுதாக புரிந்துக் கொள்கிறோமா? கணவனை விட அதிகம் சம்பாதித்தாலும் கூட ஒரு சில விஷயங்களில் வாய்க்கும், மனதிற்கும் பூட்டிட்டு கொண்டு தான் வாழ்ந்து வருகிறார்கள். பெண்கள் மனதளவில் எவ்வளவு பாதிக்கபடுகிறார்கள் என்பதற்கு மாதவிடாய் என்ற ஒன்றை எடுத்துக் கொள்ளுங்களேன்…

இன்னும் பல இடங்களில் அந்த மூன்று நாட்களில் ஒதுக்கி வைப்பதும், அரவணைக்க மறுப்பதும் என நாம் செய்யும் கொடுமைகள் தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கிறது. ஒருவேளை பெண்கள் இந்த மாதவிடாய் பெறாமல் இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருப்பார்களோ என்னவோ… இது, இந்திரன் பெற்ற சாபமும், பெண்கள் மாதவிடாய் பெற்றாதாக கூறப்படும் ஆன்மீக கதை…

சாபம்!

ஒருமுறை குரு பிரகஸ்பதி இந்திர தேவன் மீது கோபம் கொண்டார். இதை அனுகூலமாக எடுத்துக் கொண்ட அரக்கர்கள் தேவ லோகத்தை தாக்கினர். அப்போது இந்திரா தேவர் தனது இராஜ்ஜியத்தை விட்டு ஓடினார். இந்த காரியத்திற்கு ஒரு தீர்வு காண இந்திர தேவன் படைக்கும் கடவுளான பிரம்மனை அணுகினார்.

முனிவர்!

அப்போது பிரம்மா இந்திரா தேவனிடம், உனக்கு உனது இராஜ்ஜியம் திரும்ப கிடைக்க வேண்டும் என்றால் ஒரு முனிவருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என கூறினார். அந்த முனிவர் உனது பணிவிடை மூலம் மனமகிழ்ந்து போனால் உன் ராஜ்ஜியம் மீண்டும் கிடைக்கும் என கூறினார்.

பிரம்மாவின் அறிவுரை கேட்ட இந்திரன் ஒரு முனிவருக்கு பணிவிடை செய்ய துவங்கினார். அந்த முனிவரின் தாய் ஒரு அசுர இனத்தை சேர்ந்தவர். ஆகையால் அந்த முனிவர் அசுரர்களுடன் நெருக்கமாகவும் இருந்து வந்தார்.

கொலை!

அந்த முனிவர் அசுரர்களுடன் நெருக்கம் காட்டி வந்ததை அறிந்த இந்திரா தேவன், அந்த முனிவரை கொலை செய்தான். முனிவர் அல்லது குருவை கொலை செய்வது பெரிய குற்றமாகும். இதில் இருந்து தப்பிக்க மலரில் மறைந்திருந்து இந்திர தேவன் விஷ்ணுவை வணங்கி வந்துள்ளார்.

இந்திர தேவனின் வேண்டுதலை கண்டு மகிழ்ந்த விஷ்ணு அவரை காப்பாற்றுவதாக கூறினார். மேலும், அந்த குற்றத்தில் இருந்து தப்பிக்க அறிவுரையும் அளித்தார். அதில், இந்திரன் தனது சுமைகளை மரம், பூமி, நீர் மற்றும் பெண்ணுடன் வகுத்துக் கொள்ள கூறப்பட்டாதாக கதையில் கூறப்பட்டுள்ளது.

சாபம்!

சாபத்தின் நான்கில் ஒரு பங்கு மரத்திற்கு வரமாக அளிக்கப்பட்டது. அதாவது வாடினாலும் மீண்டும் உயிர் பெறுவதாக அந்த வரம் அளிக்கப்பட்டது. நான்கில் இரண்டாம் பங்கு நீருக்கு அளிக்கப்பட்டது. இதன் நீர் மற்ற பொருட்களை சுத்தம் செய்ய, புனிதமடைய உதவும் என வரமளிக்கப்பட்டது. நான்கில் மூன்றாம் பங்கு பூமிக்க வரமாக அளிக்கப்பட்டது.

இதில் பூமி நீரின்றி வறண்டு போனாலும், மீண்டும் தானாக புத்துயிர் பெறும் என்பது அந்த வரமாக இருந்தது. நான்காம் பங்கு பெண்களுக்கு மாதவிடாயாக அளிக்கப்பட்டது. இந்த வரத்தின் மூலம் பெண்கள் ஆண்களை விட மதிப்பு அதிகம் பெறுவார்கள் என அளிக்கப்பட்டது என அந்த ஆன்மீக கதையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment