ஏப்ரிகாட் டார்ட் செய்வது எப்படி ?

by Lifestyle Editor
0 comment

தேவையான பொருட்கள்

250 கி. மாவு
100 கி. ஐசிங் சர்க்கரை
100 கி. வெண்ணெய்
1 முட்டை
50 கி. சர்க்கரை
100 கி. வால்நட், நன்றாக நறுக்கியது
100 கி. ஏப்ரிகாட், நன்றாக நறுக்கியது
50 மி.லி. ஆரஞ்சு ஜூஸ்
10 மி.லி. எலுமிச்சை சாறு

செய்முறை

1. ஓவனை 160கு செல்சியஸுக்கு முன்கூட்டியே சூடுப்படுத்தவும். பையின் மேற்பகுதியை செய்வதற்கு மாவு, ஐசிங் சர்க்கரை, வெண்ணெயை ஒரு மிக்சியில் போட்டு, அவை பிரட் துணுக்குகள் போலாகும் வரை அரைக்கவும். முட்டை சேர்த்து, மாவு சேர்ந்து வரும் வரை சுழற்றவும்.

2. 10 அங்குல டார்ட் பேனில் அந்த கலவையை வைத்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை, கிரெஸ்ட் பிரவுன் நிறமாகும் வரை அப்படியே பேக் செய்யவும்.

3. ஃபில்லிங்கை செய்வதற்கு சர்க்கரை, வால்நட், ஏப்ரிகாட் போன்றவற்றை ஒரு பேனில் இட்டு, ஏப்ரிகாட் மிருதுவாகும் வரை வேக வைக்கவும். இதை டார்ட்டில் போட்டு, 20 முதல் 25 நிமிடங்கள் வரை ஓவனில் வைக்கவும்.

Related Posts

Leave a Comment