தென்னாப்பிரிக்காவில் நீச்சல் குளத்துக்கு குளிக்கச் சென்ற தம்பதியர், நீச்சல் குளத்தில் உல்லாசமாக நீச்சலடித்துக்கொண்டிருந்த அழையா விருந்தாளியைக் கண்டு திகிலடைந்தனர்.
ஆம், அந்த நீச்சல் குளத்தில் ராட்சத முதலை ஒன்று நீந்திக்கொண்டிருந்தது. உடனே, Jacob Breytenbach மற்றும் அவரது மனைவியான Angel என்னும் அந்த தம்பதி, விலங்குகள் மீட்புக் குழுவை அழைத்துள்ளார்கள்.
வெளியாகியுள்ள வீடியோவில், அந்த விலங்குகள் மீட்புக் குழுவினர், அந்த முதலையின் வாயைக் கட்டி, அதை நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றுவதைக் காணலாம். பின்னர், அந்த முதலை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இப்போதெல்லாம் வீட்டை விட்டு வெளியே வரும் முன், தங்கள் CCTV கமெராவை சோதித்து, முதலை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான் வெளியேவே வருகிறார்களாம் தம்பதியர்!