மலச்சிக்கலை தீர்க்கும் அற்புத நாட்டு வைத்தியம்!

by Lifestyle Editor
0 comment

இன்றைய காலக்கட்டங்களில் அதிகமானோர் சந்தித்து வரும் பிரச்சினைகளில் மலச்சிக்கல் ஒன்றாகும்.

தினசரி மலச்சிக்கல் ஏற்படுவது உடலுக்கு அவ்வளவு நல்லது அல்ல. இது பல நோய்களை உண்டாக்க வழிவகுக்கும்.

உணவுப்பழக்கம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல் இது போன்ற வாழ்க்கைச்சூழல் பழக்கவழக்க முறையினால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட காரணமாகிறது.

அவற்றை தடுக்க மருந்துகள் தேவையில்லை. ஒரு சில இயற்கை வைத்தியங்கள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • தினமும் இருவேளை செம்பருத்தி இலைகளை பொடி செய்து சாப்பிட்டு வாருங்கள். மலச்சிக்கல் குணமாகும்.
  • மோருடன் இஞ்சி, கல்உப்பு, பெருங்காயம் கலந்து ஒரு டம்ளர் குடியுங்கள். இந்த மோரை உணவுடன் அதிகம் சேர்த்துக் கொள்வதால் குடல் தன்மை பாதுகாக்கப்பட்டு மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது.
  • கொய்யாப் பழத்தினை விதையுடன் உண்டு வந்தால் குடல் இயக்கம் சீராவதோடு, மலச்சிக்கலையும் தீர்க்கும். தினமும் ஒன்றை சாப்பிட்டவுடன் நீர் அருந்துவதை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
  • சின்ன வெங்காயத்தை விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகி நச்சுக்களும் வெளியேறும்.
  • எலுமிச்சை சாறு அரை மூடி , ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் தீரும்.
  • அரைக்கீரையுடன் பாசிப்பயிறு, மிளகு, நெய் சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.
  • ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட மலக்கட்டு தீரும்.
  • அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய் 50 கிராம் சேர்த்து காய்ச்சி தினமும் 2 தேகரண்டி சாப்பிட மலச்சிக்கல் குணமடையும்.
  • தினமும் அரை தம்ளர் நெல்லிக்காய் சாறை குடித்து வர, குடலியக்கமானது நன்கு செயல்பட்டு, நாள்பட்ட மலச்சிக்கல் குணமாகும்.
  • பிஞ்சு கடுக்காய் 100 கிராம், சுக்கு100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்கும் பொழுது குடித்து விட்டு படுக்க மலம் இளகும்.

Related Posts

Leave a Comment