ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக நியூசிலாந்து தகுதிப்பெற்றது.
அவுஸ்திரேலியாவின் தென் ஆப்பிரிக்காவிற்கான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான சுற்றுப்பயணம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
தென் ஆப்பரிக்காவில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக இந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து விளையாடுவது உறுதியானது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.