தாயின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொன்ற மகன்…

by Lifestyle Editor
0 comment

மதுரை

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தாயின் தலையில் கிரைண்டர் கல்லைப்போட்டு மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியில் வசித்து வந்தவர் வஞ்சிமலர் (49). இவரது கணவர் சேகர். இவர்களுக்கு ஓம்சக்தி (19) என்ற மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பிரிந்து சென்றதால் வஞ்சமலர், தனது மகனுடன் தனியே வசித்து வந்தார். ஓம்சக்தி, மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் வஞ்சிமலர் இரவு நேரங்களில் ஆண் நண்பருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஓம்சக்தி அவரை கண்டித்து உள்ளார். ஆனால் அவர் தொலைபேசியில் பேசுவதை கைவிடவில்லை என கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து நேற்றிரவு தாய், மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, இருவரும் உறங்க சென்ற நிலையில், நள்ளிரவில் வஞ்சி மலரின் தலை மீது கிரைண்டர் கல்லை போட்டு ஓம் சக்தி கொலை செய்தார்.

தொடர்ந்து அவர் தாமாகவே செல்லூர் காவல்நிலையத்தில் சென்று சரணடைந்தார். இதனை அடுத்து, போலீசார் சடலத்தை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்குப்பதிவு செய்து, ஓம்சக்தியை கைதுசெய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment