கட்டுப்பாடுகளை தளர்த்துவது கொரோனா வைரஸ் மீண்டும் முழுபலத்துடன் திரும்புவதற்கு வழிவகுக்கும் – WHO

by Lankan Editor
0 comment

கட்டுப்பாடுகளை துரித கதியில் தளர்த்துவது, கொரோனா வைரஸ் மீண்டும் முழு பலத்துடன் திரும்புவதற்கு வழிவகுத்துவிடும் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் கூறுகையில், “தொடர்ந்து மூன்றாவது வாரமாக புதிய கொரோனா பாதிப்புகள் சர்வதேச அளவில் குறைவாக பதிவாகி வருகிறது. சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் காணப்பட்டாலும் உலகளாவிய அளவில் பார்க்கும் போது ஊக்கபடுத்தும் வகையிலான செய்திகளை காண முடிகிறது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை இது காட்டுகிறது. உருமாறிய கொரோனா பரவினாலும் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என நமக்கு கடந்த 3 வார எண்ணிக்கை பரிந்துரைக்கிறது” என கூறினார்.

Related Posts

Leave a Comment