இலங்கையில் 64,983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

by Lankan Editor
0 comment

இலங்கையில் நேற்றைய தினம் 826 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாட்டில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 64,983 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களுள் 816 நபர்கள் பேலியகொட – மினுவாங்கொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

இதனால் பேலியகொட – மினுவாங்கொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் சிக்கிய நபர்களின் மொத்த எண்ணிக்கை 60,990 ஆக உயர்வடைந்துள்ளது.

ஏனைய 10 பேர் சிறைச்சாலை,வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களும் ஆவர்.

இது இவ்வாறிருக்க கொரோனா தொற்றுக்குள்ளான 916 நோயாளர்கள் நேற்றைய தினம் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதனால் குணமடைந்தவர்களின் மொத்த தொகையும் 58,075 ஆக பதிவாகியுள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 6,585 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தில் 839 நபர்கள் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொவிட் – 19 தொற்றினால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment