இலங்கையில் இதுவரையில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

by Lankan Editor
0 comment

இலங்கையில் சுகாதார பிரிவினர், முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 60,000 பேருக்கு இதுவரை அஸ்ட்ரா ஜெனகா (Astrazeneca) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கொவிட் – 19 கட்டுப்பாடு மற்றும் ஆரம்ப வைத்திய சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தடுப்பூசி பெற்றுக்கொண்ட எவருக்கும் குறிப்பிடத்தக்களவு ஒவ்வாமை ஏற்படவில்லை என இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பூசி பகிர்ந்தளிக்கப்படும் முறைமையின் கீழ் நாட்டின் சனத்தொகையில் 65 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment