இறந்த தந்தையை திருமணத்திற்கு அழைத்த பாச மகள்கள்

by News Editor
0 comment

சகோதரியின் திருமணத்திற்காக, உயிரிழந்த தந்தையை சிலையாக வடிவமைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் சகோதரிகள்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். முதல் இரண்டும் மகள்களுக்கு திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்தது.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக செல்வம் கடந்த 2012 ஆம் ஆண்டு உயிரிழந்தார். தற்போது அவரது செல்ல மகள்லட்சுமி பிரபா திருமணத்திற்கு செல்வம் இல்லாமல் இருப்பது அவரது குடும்பத்திற்கும் மணமகளான அவரது மகளுக்கும் மிகுந்த மனவருத்ததை ஏற்படுத்தியது.

இவர்களின் வருத்ததை போக்க ரூ 6 லட்சம் செலவில், லண்டனில் பணிபுரியும் மூத்த சகோதரி புவனேஷ்வரி தந்தையின் முழு உருவ சிலையை வடிவமைத்துள்ளார்.

சிலையானது பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிலிக்கான் மற்றும் ரப்பரை கொண்டு தயாரிக்கபட்டது.

இந்த நிலையில் கடைசி சகோதரியும் மணமகளுமான லட்சுமி பிரபா உயிருடன் இல்லாத தனது தந்தை செல்வம் சிலை முன்பு மாலை மாற்றி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.

அதோடு லட்சுமி பிரபா தன் தந்தையின் சிலையை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த சம்பவம் காண்போரை நெகிழ வைத்துள்ளது.

Related Posts

Leave a Comment