இங்கிலாந்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

by News Editor
0 comment

பெரும் பனிப்புயல் ஒன்று இங்கிலாந்தை புரட்டிப்போட இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

இங்கிலாந்தில் தற்போது பரவி வரும் புதிய கொரோனா தொற்றால் அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது புதிய பனிப்புயல் ஒன்று ஆபத்தை ஏற்படுத்த உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இங்கிலாந்தின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளுக்கு பனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் 5 சென்டி மீட்டர் அளவுக்கும், உயரமான பகுதிகளில் 40 சென்டி மீட்டர் அளவுக்கும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

இங்கிலாந்தைப் பொருத்தவரை, மோசமான வானிலை காரணமாக பெரு வெள்ளம் ஏற்படலாம் என்றும், 200 இடங்களுக்கு ஏற்கனவே பெரு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment