பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா எங்கே தங்கியிருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூருவில் பரப்பரன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு, கடந்த 27-ஆம் திகதி விடுதலை செய்யப்படவிருந்தார்.
ஆனால் அவர் உடல்நிலை, கொரோனா பாதிப்பு போன்றவைகளால் சிகிச்சை பெற்று வந்த அவர், அதன் பின் கடந்த 30-ஆம் திகதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி வந்த காரில் சென்றதுமட்டுமின்றி, அதில் அதிமுக கொடியும் இருந்தது.
இது அதிமுகவினை சற்று பீதியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள சசிகலா, வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதனால் பெங்களூரு புறநகரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி இருக்கிறாராம். இன்னும் ஒரு வாரம் அங்கு தங்கி இருக்கும் சசிகலா, அங்கிருந்து சென்னைக்கு செல்ல இருப்பதாக தெரிகிறது.
வருகிற 8-ஆம் திகதி சசிகலா சென்னை செல்லலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.