மூதாட்டியின் காதை அறுத்து நகை கொள்ளை…

by Lifestyle Editor
0 comment

தென்காசி

தென்காசி அருகே மூதாட்டியின் காதை அறுத்து, தங்க நகையை திருடிச்சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோன்மணியம் (88). கணவர் உயிரிழந்த நிலையில், இவர் தனது மகன் ராமசாமியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றதால் மூதாட்டி திண்ணையில் படுத்து உறங்கி உள்ளார். அப்போது, அங்கு வந்த மர்மநபர் ஒருவர் மூதாட்டியின் காதை கத்தியால் அறுத்து, அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்க கம்மலை பறித்துச்சென்றார்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் திரண்டதால் மர்மநபர் தப்பியோடினார். இதனை அடுத்து, படுகாயம் அடைந்த மனோன்மணியத்தை மீட்டு அவர்கள் சங்கரன்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மூதாட்டிக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கரிவலம்வந்த நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர். வீட்டில் தூங்கிய மூதாட்டியின் காதை அறுத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts

Leave a Comment