எப்போதும் பசுமையாக இருக்கும் வெப்ப மண்டல காட்டில் இந்தக் காப்பகம் அமைந்துள்ளதால் யானை, சிறுத்தை, புள்ளிமான், கோழையாடு, கரடி, காட்டுப்பன்றி போன்ற காட்டு விலங்குகளும் கொம்பிறகுப் பறவை, குயில் வகைகள், காட்டு கோழிகள் போன்ற உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ முடியும்.
யானைச்சவாரி மூலமாகவோ ஒதுக்கப் பட்ட பாதையில் வாகனத்தின் மீதோ சென்று இந்தக் காட்டை கண்டு களிக்கலாம். ஊட்டியில் இருந்து 70 கி.மீ. தொலைவில் இந்தக் காப்பகம் உள்ளது.