பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக் கொண்டாட்டம் வரும் 7ம் திகதி ஒளிபரப்பாகும் நிலையில் இதன் ப்ரோமோ பிரபல ரிவியில் வெளியாகியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதியாக ஆரி வின்னராகவும், பாலாஜி ரன்னராகவும் வந்தனர்.
இவர்கள் இருவரினாலேயே இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது என்றே கூறலாம். பிக் பாஸ் 4 சீசனில் இறுதி வாரத்தில் மொத்தம் 31,27,72,000 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் முதல் இடம் பிடித்த ஆரிக்கு 16.5 கோடி இடம் பாலாஜிக்கு 6.14 கோடி வாக்குகளும் கிடைத்திருந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து பல நாட்கள் ஆன நிலையில் பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்ற அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் வரும் 7திகதி மதியம் 1.30க்கு ஒளிபரப்பாகவிருக்கின்றது.
இவரது மரியாதை இல்லாத பேச்சும், இவர் கூறிய பல விடயங்களும் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சி குறித்தும் கமல் மற்றும் ஆரி குறித்தும் அவதூறாக பேசியதால் இந்நிகழ்ச்சிக்கை அழைக்கப்படவில்லை என்று பலரும் கூறி வருகின்றனர்.