இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி.. 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி

by Lifestyle Editor
0 comment

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளது.

முதல் டெஸ்ட் வருகிற 5-ம் தேதியும், 2-வது டெஸ்ட் வருகிற 13-ந்தேதியும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா காரணமாக ரசிகர்களுக்கு அனுமதியின்றி பூட்டிய வைக்கப்பட்ட மைதானத்தில் நடைபெறவுள்ள 2-வது டெஸ்டில்இன்றிலிருந்து 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இத்தகவல் ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் 2-வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கும் என தமிழ்நாடு கிரக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்தாகும்.

Related Posts

Leave a Comment