பிரித்தானிய அரசு கிட்டத்தட்ட 6 லட்சம் மக்களுக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தி, அதன் முந்தைய தினசரி சாதனையை முறியடித்துள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை 10,000க்கும் மேற்பட்ட பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக என்.எச்.எஸ் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் பிப்ரவரி மாத இலக்கை அடைய ஒரு நாளைக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
ஆனால் திட்டத்தில் மிகவும் பின்தங்கியிருந்த நிலையில், கடந்த வாரம் தீவிரமாக செயல்பட்டு தினசரி இலக்கை சமீப நாட்களாக அடைந்துவந்தது.
இந்நிலையில், ஒரே நாளில் 598,389 மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி, அதன் முந்தைய தினசரி சாதனையான 491,970 எனும் எண்ணிக்கையை முறியடித்துள்ளது.
டிசம்பர் 8 முதல் இதுவரை பிரித்தானியாவில் குறைந்தது 9 மில்லியன் மக்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
இருப்பினும் இதுவரை 20% மக்கள் தங்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.