துப்பாக்கி குண்டுகள் முழங்க எஸ்.ஐ பாலுவின் உடல் தகனம்!

by Lifestyle Editor
0 comment

வாகனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட எஸ்.ஐ பாலுவின் உடல், போலீஸ் மரியாதையுடன் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பாலு இன்று காலை வாகனம் ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். நேற்று இரவு கொற்கையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, முருகவேல் என்பவர் இவரிடம் குடித்துவிட்டு தகராறு செய்திருக்கிறார். அதை பாலு கண்டிக்கவே, தனது சரக்கு வாகனத்தை ஓட்டி வந்து பைக்கில் சென்று கொண்டிருந்த பாலு மீது ஏற்றி கொலை செய்தார் முருகவேல். அவரை பிடிக்க போலீசார் 10 தனிப்படை அமைத்தனர். ஆனால், முருகன் தாமாக முன்வந்து விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

எஸ்.ஐ பாலு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். மேலும், தகுதியின் அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில், முடிவைத்தானேந்தல் பகுதியில் உள்ள மின் மயானத்தில் கனத்த இதயத்துடன் பாலுவின் உறவினர்களும் போலீசாரும் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர். பின்னர், துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் எஸ்.ஐ பாலுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Related Posts

Leave a Comment