மேலும் 288 இலங்கையர் நாடு திரும்பினர்

by Lankan Editor
0 comment

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவிற்குச் சென்றிருந்த நிலையில் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியிருந்ததாக கூறுப்படும் இலங்கையர்கள் மற்றும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் நிர்க்கதிக்கதிக்குள்ளாகியிருந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் விசேட திட்டத்திற்கமைய குறித்த அனைவரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதன்படி, குறித்த இலங்கையர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு, நாடு திரும்பிய அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இராணுவத்தினால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment