சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியை பறக்கவிடுமாறு மக்களிடம் கோரிக்கை

by Lankan Editor
0 comment

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 திகதி 73 ஆவது சுதந்திர தினம் அனுட்டிக்கப்படவுள்ளது. இத் தினத்தை முன்னிட்டுஅரச மற்றும் தனியார் நிறுவனங்கள், அனைத்து வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்களிலும் இன்று தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை 07 ஆம் திகதி வரை தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன்,அரச அலுவலகங்கள் அமைந்துள்ள சகல கட்டடங்களையும் பெப்ரவரி 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மின்விளக்குகளால் அலங்கரிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செழிப்பான எதிர்காலம் சௌபாக்கியமான நாடு’ என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதனை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பெப்ரவரி 4 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் சுதந்திர தின நிகழ்விற்கான கொண்டாட்டங்கள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment