அடுக்கடுக்காக வைக்கப்பட்ட கேள்வி… ஆரி கொடுத்த மாஸான பதில்

by Lifestyle Editor
0 comment

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரியிடம், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட சக போட்டியாளர்கள் மன்னிப்பு கேட்டதை எப்படி பார்க்குறீங்க, உள்ளிட்ட ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

அதற்கு கொஞ்சம் கூட அசராமல் தனது பாணியில் ஆரி கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது ஏகப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு நடிகர் ஆரி பேட்டி கொடுத்து வருகிறார்.

நேர்மைக்கு நான் மட்டுமே பிராண்டிங் இல்லை. நேர்மையை நான் ஸ்ட்ராட்டஜியை பயன்படுத்தி விளையாடி இருந்தா அதை மனசுல வைத்துக் கொண்டே நடிப்பது போலவே விளையாட வேண்டும். நான் நானாக இருக்கவே முயற்சித்தேன். நானும் தப்பு பண்ணியிருக்கேன். என்னை அந்த கேமுக்கான ஆளாக தகுதி படுத்திக்க முயன்றேன் என்றார்.

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொருவரிடமும் தகுதி படுத்திக்கோங்கன்னு நீங்க சொன்னதே உங்களுக்கு எதிராகவும் ஆனது. அவர் மட்டும் தான் தகுதியானவரா? நாங்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? என பலரும் கேட்க ஆரம்பித்தனர்.xx

தகுதின்னு எதை சொன்னீங்க என்கிற கேள்விக்கு, தினமும் நம்மை வெற்றிப் பாதையை நோக்கி தகுதி படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையே மீன் பண்ணி சொன்னேன் என்றார்.

பிக் பாஸ் வீட்டுக்குள்ள அதுவும் முக்கியமாக வெள்ளிக்கிழமையானால் சில போட்டியாளர்கள் உங்களிடம் சண்டை செய்வதும் பின்னர் ஆரி பிரதர் சாரி பிரதர் என சொல்வதுமாகவே ஷோ சென்றது. அதைப் பற்றி எப்படி பார்க்குறீங்க என்ற கேள்விக்கு, அடுத்தவர்கள் முழு மனதோடு நம்மிடம் மன்னிப்பு கேட்கிறாங்களான்னு பார்க்கக் கூடாது.

நாம நமக்கு சரியா இருக்கணும், மன்னிப்பு கேட்ட மன்னிக்கிறது தான் மனித இயல்பு. அதைத்தான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கும் போது நான் செய்தேன். அடுத்தவர்கள், எந்த டோன்ல மன்னிப்பு கேட்கிறாங்க, நடிக்கிறாங்களான்னுலாம் நான் ஒரு போதும் நினைத்து பார்க்கவில்லை. அது நமக்குத் தான் ஸ்ட்ரெஸ் கொடுக்கும் என்றார்.

பாலாவுக்கு மட்டுமே டைட்டில் வின் பண்ண வாய்ப்பிருக்குன்னு அவரை ரொம்பவே ஊக்கப்படுத்தி பேசியது போல தெரிந்ததே என்ற கேள்விக்கு, எல்லா போட்டியாளர்களுக்கும் என்னால் முடிந்த சப்போர்ட் கொடுத்திருக்கிறேன். அவங்க சோர்வா இருக்கும் போது ஆறுதல் பண்ணியிருக்கேன்.

ரம்யா பாண்டியன் ஆண்களுக்கு நிகராக விளையாடிட்டு வெளியே எவிக்ட் ஆகும் போது, சிங்கப்பெண்ணாத்தான் அவங்க போறாங்கன்னு சல்யூட் செய்தேன். ரியோ போகும் போது மண்டிப்போட்டு சல்யூட் செய்தேன் என்றார்.

வெளியில இருந்து வந்தவங்க சில விசயங்களை மற்ற போட்டியாளர்களுக்கு சொல்ல, பிக் பாஸ் வீட்டின் நிலையே மாறியது. ஆனால், அப்போதும் கூட நீங்க ஏன் அதை கேட்காமல் அவாய்டு பண்ணீங்க என்கிற கேள்விக்கு, என் மனைவி உள்ளே வந்து ரொம்பவே ஹர்ட் ஆகி ஒரு விசயத்தை சொல்ல வந்தாங்க, ஆனால், அதை கேட்டு நான் விளையாடினால் நான் நானாக இருந்து விளையாட முடியாது. அதனால், தான் யாரிடமும் அதை நான் கேட்க விரும்பவில்லை என்றார். மேலும், பல கேள்விகளுக்கு ஆரி அளித்த பதில் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Related Posts

Leave a Comment