ஹொங்ஹொங் மக்களுக்கு சிறப்பு விசா… 5 ஆண்டுகளில் பிரித்தானிய குடிமகனாகலாம்!

by Lifestyle Editor
0 comment

ஹொங்ஹொங் மக்கள் பிரித்தானியாவின் குடிமக்களாக மாறக்கூடிய புதிய சிறப்பு விசா திட்டத்தை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 31) பிற்பகல் முதல், பிரிட்டிஷ் தேசிய பாஸ்போர்ட் (B.N.O) மற்றும் அவர்கள் சார்ந்தவர்கள் எவரும் பிரித்தானியாவில் வாழவும், வேலை செய்யவும் அனுமதிக்கும் புதிய விசா திட்டத்தை பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

B.N.O பாஸ்போர்ட் உள்ள எவரும் இந்த விசாவிற்கு ஆன்லைனில் இன்றுமுதல் விண்ணப்பிக்க முடியும்.

விசாவிற்கு விண்ணப்பித்து பாதுகாப்பவர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு Settlement-க்கு விண்ணப்பிக்க முடியும், பின்னர் பிரித்தானிய குடியுரிமைக்கு மேலும் 12 மாதங்களுக்குப் பிறகு விண்ணப்பிக்க முடியும்.

ஹொங்ஹொங் கிளர்ச்சியின் எதிரொலியாக, கடந்த ஆண்டு சீனா அதன் புதிய பாதுகாப்பது சட்டத்தை அமுல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, ஜனவரி 31 முதல் பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டு (B.N.O) பாஸ்போர்ட்டை ஒரு செல்லுபடியாகும் பயண ஆவணமாக அங்கீகரிக்க மாட்டோம் என்று சீனா அறிவித்தது. இதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், அடுத்த ஒரே ஆண்டில் 154,000 ஹொங்ஹொங் மக்கள் பிரித்தானியாவுக்கு வரலாம் என்றும் 5 ஆண்டுகளில் 322,000 பேர் வரக்கூடும் என்றும் பிரித்தானிய அரசு கணித்துள்ளது.

ஜூலை முதல் ஹொங்ஹொங்கிலிருந்து சுமார் 7,000 பேர் ஏற்கனவே பிரித்தானியாவில் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment