இதற்காக தான் என் ஆடைகளை களைந்தேன்! லண்டன் சாலையில் நிர்வாணமாக ஓடிய நபரால் ஏற்பட்ட அதிர்ச்சி

by Lifestyle Editor
0 comment

லண்டன் சாலையில் நபர் ஒருவர் நிர்வாணமாக ஓடியதால் பொலிஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.

தற்போது இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து அதிதீவிரமாக பரவியது. இதனால் இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில், லண்டன் வீதிகளில் ஒரு நபர் நிர்வாணமாக ஓடிக்கொண்டிருப்பதை கண்டு மக்களும், காவல்துறை அதிகாரிகளும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஜனவரி 24ம் திகதி பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு அருகில் உள்ள நடைபாதையில் நிர்வாணமாக ஓடிய இளைஞரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் நிர்வாணமாக நடந்து சென்ற அந்த நபர் குறித்து அங்கிருந்த மக்கள் உள்ளூர் காவல் துறைக்கு தகவல் அளித்திருந்தனர்.

தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்தை அடைந்தபோது, அந்த நபர் அந்த இடத்தில் தென்படவில்லை. இந்த சம்பவத்தை நேரில் கண்ட 22 வயதான கேத்தரின் என்பவர் தனியார் பத்திரிகைக்கு தெரிவித்தாவது, அந்த நபர் ப்ளூம்ஸ்பரி ஸ்கொயர் கார்டனை நோக்கி விரைவாக நடந்து கொண்டிருந்தார்.

பின்பு பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை கடந்தார். அங்கிருந்த கார்டன் பகுதியை அடைந்த போது சுற்றிலும் திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் நடந்து சென்றார் எனக் கூறினார்.

அந்த நடைபாதையில் நடந்து கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியில் அந்த நபரை பார்த்ததாக கேத்தரின் தெரிவித்தார். மேலும், நடைபாதையில் நடந்து சென்ற ஒரு பாதசாரி, அந்த நபரிடம் ஏன் ஆடைகள் இல்லை என்று கேட்டபோது, தன்னைக் கழுவுவதற்காக தனது ஆடைகளை கழற்றிவிட்டதாக அந்த நபர் விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த நபர் தனது மனநிலையை முற்றிலும் இழந்து விட்டாரோ என பல மக்கள் கருதுகின்றனர். மேலும், நிர்வாணமாக நடந்து சென்ற நபரை காவல்துறை அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Related Posts

Leave a Comment