திண்டுக்கல் அருகே அமமுக நிர்வாகி வெட்டிக்கொலை

by Lifestyle Editor
0 comment

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே அமமுக நிர்வாகி மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் அடுத்த பாலகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கலையரசன்(33). இவர் அமமுக ஒன்றிய இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு சத்யபிரிய என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்றிரவு பணிமுடித்து கலையரசன் ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். உத்தனம்பட்டி அருகே வந்தபோது பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவை வழிமறித்த மர்மநபர்கள், கலையரசனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், கொலை சம்பவம் குறித்து கலையரசனின் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். அமமுக நிர்வாகி மர்மநபர்களால் வெட்டிகொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts

Leave a Comment