தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை பிப்.28 வரை நீடித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறைந்து வரும் சூழலிலும், தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான பொதுமுடக்கம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், பொதுமுடக்கத்தை நீடிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், பள்ளிகளை திறப்பது குறித்தும் தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிப்.28ம் தேதி வரை தளர்வுடன் கூடிய பொதுமுடக்கம் நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கவும் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளுக்கும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் தொடங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகள் நேரக் கட்டுப்பாடுகள் என்று இயங்கலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்கள் செயல்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தியேட்டர்களில் தமிழக அரசு 100% இருக்கைகளுக்கு அனுமதின் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.