ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகிறார் – சரத் வீரசேகர

by Lankan Editor
0 comment

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகின்றார் என தெரிவித்துள்ள, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மனித உரிமை ஆணையாளர் தன்மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை முற்றிலும் பிழையான குற்றச்சாட்டுகளை கொண்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகின்றார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எங்கள் ஜனாதிபதிக்கு எதிராக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார் இது தவறு என குறிப்பிட்டுள்ள சரத்வீரசேகர அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஓய்வுபெற்ற இராணுவஅதிகாரிகளை முக்கிய பதவிகளிற்கு நியமித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆணையாளர் என்னை குற்றம்சாட்டியுள்ளார், நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன் நான் கொழும்பு மாவட்டத்தில் அதிக விருப்புவாக்குகளையும் இலங்கையில் இரண்டாவது அதிக விருப்புவாக்குகளையும் பெற்றவன். மனித உரிமை ஆணையாளரை பொறுத்தவரை அது பிழையான விடயமாக காணப்படுகின்றது என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமக்கு முன்னாள் அமைச்சர் மங்களசமரவீரவையே குற்றம்சாட்டவேண்டும், முன்னைய அரசாங்கத்தின் சார்பில் அவரே அமெரிக்காவின் தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கினார் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது துரோகம் எனவும் இலங்கைமக்கள் அச்சப்படத்தேவையில்லை ஜனாதிபதி அவர்களை நன்கு பார்த்துக்கொள்வார் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment