‘தடுப்பூசி போடுவதை இடைநிறுத்தம் செய்யவேண்டும்’ பிரித்தானியாவுக்கு WHO வலியுறுத்தல்

by Lifestyle Editor
0 comment

பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதும், பிரித்தானியா அதன் தடுப்பூசி திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மிக வேகமாக அதிகமான கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்திவரும் நாடுகளில் பிரித்தானியா, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன.

அதில் பிரித்தானியா, வரும் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் நாட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் அனைவருக்கும் முதல் கட்டமாக தடுப்பூசிகளை வழங்கி முடிக்கவுள்ளது.

அதே சமயம், பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் இலையுதிர் காலத்திற்குள் தடுப்பூசியின் முதல் டோஸை வழங்கிவிட வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.

உலகின் பல நாடுகள் இன்னும் தங்கள் தடுப்பூசி திட்டத்தை தொடங்கமுடியாமல் திணறிவரும் நேரத்தில் பிரித்தானியா அதன் முன்னுரிமைக் குழுக்களுக்கு இரண்டாவது டோஸையும் வழங்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதும், பிரித்தானியா அதன் தடுப்பூசி திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது மற்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கும் தட்டுப்பாடு இன்றி தடுப்பூசிகள் நேரத்துக்கு கிடைக்க உதவியாக இருக்கும்.

இதே போன்று தடுப்பூசி திட்டத்தில் முன்னற்றம் அடைந்துவரும் ஒவ்வொரு நாட்டையும் முதல் ஒன்பது முன்னுரிமைக் குழுக்களுக்கு தடுப்பூசி போட்டவுடன் இடைநிறுத்தம் செய்யவேண்டி வலியுறுத்திவருவதாக WHO தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment