‘அலகுமலை ஜல்லிக்கட்டு’ போட்டியில் சீறிப்பாயும் காளைகள்!

by Lifestyle Editor
0 comment

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிலையில், இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருக்கும் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

போட்டியில் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை அடக்க 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களமிறங்கியுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியை காண வருவோர் வாடிவாசல் அருகே அமர்ந்து பார்க்கும் வகையில் மிகப் பெரிய கேலரி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, வாகன நிறுத்தம் உள்ளிட்டவற்றுக்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பாத்திரம், பைக், தங்க காசுகள் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment