நாடு முழுவதும் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை!

by Lifestyle Editor
0 comment

இந்தியாவில் 1,68,784 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. இருப்பினும், மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றுமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணியும் தொடங்கி இதுவரை 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, விரைவில் இந்தியா கொரோனா இல்லாத நாடாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,052 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 127 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பதாகவும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1.07 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.54 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் தற்போது 1.68 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment