கோவில்களில் ஏன் தேங்காய் உடைக்கிறார்கன்னு தெரியுமா?

by Lifestyle Editor
0 comment

கோவில்களுக்கு சென்றால் பல பேர் தேங்காய்களை உடைப்பதை பார்த்திருக்கிறோம். பூசாரிகள் கடவுள் சிலைக்கு முன்னால் தேங்காயை இரண்டாக உடைத்து பூஜை செய்வார்கள்.

அது மட்டுமல்ல எந்தவொரு விசேஷமாக இருந்தாலும் தேங்காய் இல்லாமல் எந்த ஒரு காரியமும் நடக்காது. நல்லது, கெட்டதுக்கெல்லாம் தேங்காயை கொண்டு தான் பூஜைகள் நடத்தப்படுகிறது.

கிணறு தோண்டுவது என்றாலும் கையில் தேங்காயை முன் வைத்து காட்டும்போது அது எந்த இடத்தில் அதிர்கிறதோ அந்த இடத்தில் தான் நிலத்ததடிநீர் அதிகமாக உள்ளதாக கண்டறிந்து தோண்டினார்கள்.

அப்படி ஏன் தேங்காய்களுக்கு இப்படி ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதை பார்ப்போம்:

உலகில் முதன் முதலாக தேங்காய் இந்தோனேசியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து முதலாம் நூற்றாண்டில் தேங்காய் இந்தியாவிற்கு வந்தது.

தேங்காய் அனைத்து புனிதமான கருதப்படுகின்றன. எந்தவித சுபகாரியங்களும் தேங்காய் இல்லாமல் நடைபெறுவதில்லை. பெரும்பாலும் வீடுகளின் கதவுக்கு மேல் இது தோரணமாக கட்டி தொங்கவிடப்படுகின்றன.

தேய்காய் கருவுறுதலின் அடையாளமாக கருதப்படுவதால் கருத்தரிக்க விரும்பும் பெண்கள் தென்னை மரத்தை நட்டு வைக்க வேண்டும். அதேசமயம் தெய்வங்களுக்கு தேங்காய் படைக்க வேண்டும் என்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

திருமணங்கள், திருவிழாக்கள், புதிய வாகனம் வாங்குதல், பாலம் கட்டுவது, ஒரு வீட்டின் அடிக்கல் நாட்டுதல் போன்ற சந்தர்ப்பங்களிலும் தேங்காயை பயன்படுத்துகின்றனர்.

தேங்காய் இரண்டு பகுதிகளாக உடைக்கப்பட்டு கடவுளின் சிலை முன் வைக்கப்படும். பின்னர் இந்த தேங்காய் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இது இறைவனைப் பிரியப்படுத்தவும், நம்முடைய ஆசைகளை நிறைவேற்றவும் வழங்கப்படுகிறது.

தென்னிந்தியாவில், தென்னை மரம், வேப்பமரம் அல்லது வில்வ மரம் புனிதமாகக் கருதப்பட்டு வருகிறது. தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஒரு தென்னை மரத்தை அழிப்பவர் தானே அழிந்து போவார் என்று இறை நம்பிக்கையும் உள்ளது.

தேங்காயை ஏன் கடவுளின் சிலைக்கு முன்னால் வைத்து உடைக்கிறார்கள் என்று யாராருக்காவது கேள்வி எழும்பிகிறதா? அதற்கு இன்னொரு பின்னணியும் உள்ளது.

பண்டைய காலங்களில் கடவுளுக்கு பூஜை செய்வதற்கு முன் உயிர்பலி கொடுப்பது வழக்கம். இந்த செயல் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமானது என்பதை சமூகங்கள் உணர்ந்தபோது, தேங்காயின் தோற்றம் ஒரு மனிதனின் தலை போல தோற்றமளிப்பதால், பிற்காலத்தில், இந்த நடைமுறை பரவலாகி, கோவில் வழிபாட்டின் தேங்காய் உடைப்பு வழக்கமாக மாறிபோனது. இதனால்தான் கோவில்களில் எந்த ஒரு நல்ல காரியங்களுக்கும் தேங்காயை சிலைகளுக்கு முன் உடைக்கிறார்கள்.

தென்னை மரத்தின் ஒரு அற்புதமான விஷயமான என்னவெனில், தென்னை மரத்தின் வேர்கள் கடற்கரையில் இருக்கும் உப்பு நீரை உறிஞ்சினாலும் அதன் தண்ணீர் இனிமையான நீராக மாற்றுகிறது. இது ஒருவரின் தாகத்தைத் தணிப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

Related Posts

Leave a Comment