பிரபல இயக்குனரான சங்கர் 11 ஆண்டுகளாக எந்திரன் படம் கதை திருட்டு விவகாரத்தில் நேரில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இவரின் இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், இன்று வரை எந்திரன் திரைப்படம் நிலைத்து பேசப்படுகிறது.
ஆனால் அப்படத்தின் கதை திருட்டு கதை என்று கூறி, இயக்குனர் ஷங்கரின் மேல் வழக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த வழக்கில் ஜாமீனில் வெளிவராதபடி இயக்குனர் ஷங்கருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
விசாரணையின்போது ஷங்கரும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. புகார்தாரர் தரப்பு சாட்சி விசாரணைக்காக வழக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.