நான் இந்திய அணியின் தேர்வாளராக இருந்தால் இவருக்கு தான் கேப்டன் பொறுப்பு! அவுஸ்திரேலியா முன்னாள் வீரர்

by Lifestyle Editor
0 comment

அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஷேன் லீ, தான் மட்டும் இந்திய அணியின் தேர்வாளராக இருந்தால், கோஹ்லிக்கு கேப்டன் பதவி கொடுக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்திய அணி, சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று தொடர்களில் விளையாடி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

குறிப்பாக டெஸ்ட் தொடருக்கு, கோஹ்லி இல்லாமல், இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி சென்ற ராஹானேவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி கோஹ்லி, ரஹானே இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று ஒப்பிட்டு வரப்படுகிறது.

அந்த வகையில், அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் லீ, ரஹானே தலைமையில் இந்திய அணி மிகவும் அமைதியாக இருந்தது.

அதுமட்டுமின்றி ரஹானே இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தினார். நான் மட்டும் இந்திய தேர்வாளராக இருந்தால் ரஹானேவை கேப்டனாக மாற்றி இருப்பேன். கோஹ்லிக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்து நெருக்கடிக்கு உள்ளாகாமல் அவரை பேட்டிங்கில் கலக்குமாறு கூறியிருப்பேன். இது நடந்தால் இந்திய அணி இன்னும் பலம் வாய்ந்ததாக உருவெடுக்கும் என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment