வனிதா விஜயக்குமாரை போன்றே அவரது சகோதரி ஸ்ரீதேவி விஜயக்குமாரும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை வனிதா விஜயக்குமாரின் சகோதரிகளில் ஒருவர், ஸ்ரீதேவி விஜயக்குமார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி.
அதன் பிறகு அதிகம் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஸ்ரீதேவி சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தற்போது டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் காமெடி ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க உள்ளாராம் ஸ்ரீதேவி. இதில் நடன இயக்குநரும் டிவி பர்சனாலிட்டியுமான ஷேகர் மாஸ்டருடன் இணைந்து நடுவராக பணியாற்ற உள்ளார்.
மேலும், வனிதாவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தற்போது நடுவராக கலந்து கொள்ளும் நிலையில் தங்கையும் கலந்து கொள்ள போவது பெரும் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.