இரக்கமின்றி 3 வயது குழந்தையை அடித்துச் சித்திரவதை

by Lifestyle Editor
0 comment

கோவை அருகே 3 வயது குழந்தையை வளர்ப்பு தாய் மற்றும் தந்தை அடித்து சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே இருக்கும் கரும்புக்கடை பகுதியில் வசித்து வருபவர் நஜூம்நிஷா – அப்துல்லா. இவர்கள் வீட்டில் 3 வயது குழந்தை இருக்கிறது. அந்த குழந்தையை இவர்கள் இருவரும் தினமும் அடித்து துன்புறுத்துவதாக அப்பகுதி மக்கள் போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இவர்கள் அடித்ததில் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் உடனே நிஷா வீட்டுக்கு போலீசாரும் சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பினரும் விரைந்துள்ளனர். அந்த தம்பதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த குழந்தையை தாங்கள் தத்தெடுத்து வளர்ப்பதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, அவர்களது இல்லத்தின் அருகே மக்கள் கூட்டம் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

ஈவு இரக்கமின்றி இல்லாமல் குழந்தையை கொடூரமாக தாக்கிய நஜூம்நிஷா – அப்துல்லாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணையை தொடருகின்றன. சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பினரும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். உடலில் காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

Related Posts

Leave a Comment