சியோமி அறிமுகம் செய்த புதிய தொழில்நுட்பம்… இனி இப்படி கூட சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும்

by Lifestyle Editor
0 comment

சியோமி நிறுவனம் புதுவிதமான ஏர் சார்ஜ் தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்புதிய தொழில்நுட்பம்“ எம்ஐ ஏர் சார்ஜ் ”என அழைக்கப்படுகிறது.

முதற்கட்டமாக இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஸ்மார்ட்வாட்ச், இதர அணியக்கூடிய சாதனங்கள், ஸ்பீக்கர்கள், சிறிய வீட்டு சாதனங்கள் உள்ளிட்டவைகளுக்கும் இந்த தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

இந்த தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் பல்வேறு சாதனங்களை கேபிள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டு இன்றி ஒரே சமயத்தில் சார்ஜ் செய்ய முடியும்.

இப்புதிய சார்ஜ் தொழில்நுட்பம் எந்த சாதனத்தையும் 5W திறன் கொண்டு சார்ஜ் செய்யும் வசதி கொண்டுள்ளது.

மேலும் இது இரண்டு மீட்டர்களுக்குள் இருக்கும் சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதியும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts

Leave a Comment