ஆப்கானிஸ்தானில் கார் வெடி குண்டுத் தாக்குதல்

by Lankan Editor
0 comment

ஆப்கானிஸ்தானில் இராணுவ தளத்தை இலக்காக வைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஷிர்சாத் மாவட்டத்தில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் இன்று (சனிக்கிழமை) காலை கார் வெடிகுண்டு வெடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ தளங்களைக் குறிவைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் நங்கர்ஹார் பொலிஸ்துறைத் தலைவர் குலாம் சனாய் ஸ்டானெக்ஸாய் தெரிவித்தார்.

இவ் வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்தொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.

காந்தர் மற்றும் ஃபரா ஆகிய இரண்டு மாகாணங்களில் ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் வெள்ளிக்கிழமை 58 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment