கங்காரு வடிவிலான கேக்கை வெட்ட மறுத்தது ஏன்? விளக்கமளித்த ரஹானே

by Lifestyle Editor
0 comment

பாராட்டு விழாவில் கங்காரு வடிவிலான கேக்க வெட்ட மறுத்தது ஏன் என்பதற்கு இந்திய வீரர் ரஹானே பதில் அளித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் தொடரின்போது முதல் டெஸ்டுக்குப் பிறகு விராட் கோஹ்லி விடுப்பில் நாடு திரும்பினாா்.

அடிலெய்டில் மோசமான தோல்வி கண்டிருந்த நிலையில், அஜிங்க்ய ரஹானே அணித்தலைவராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி அதிரடியாக மீண்டதுடன் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

இதனால் ரஹானேவின் தலைமைப்பண்புக்குப் பாராட்டுகள் கிடைத்தன. பிப்ரவரியில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோஹ்லி மீண்டும் அணித்தலைவராக, ரஹானே துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து ரஹானே நாடு திரும்பிய போது மும்பையில் நண்பர்கள் ஒன்று சேர்ந்து சிறிய அளவிலான பாராட்டு விழாவை நடத்தினார்கள்.

அப்போது அந்த விழாவில் ரஹானே வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கேக்கில் கங்காரு பொம்மையும் இடம்பெற்றிருந்தது.

இதனால் அந்த கேக்கை வெட்ட ரஹானே மறுத்தார். இந்தச் சம்பவம் பற்றி கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுடனான பேட்டியில் ரஹானே,

கங்காரு அவுஸ்திரேலியாவின் தேசிய விலங்கு. எனவே கங்காரு வடிவிலான கேக்கை வெட்ட நான் முன்வரவில்லை.

எதிரணி வீரர்களுக்கு மரியாதை அளிக்கவேண்டும், நாம் வரலாறு படைத்தாலும் அவர்களை நன்கு நடத்த வேண்டும்.

எதிரணிக்கும் மற்ற நாடுகள் மீதும் நமக்கு மதிப்பு இருக்க வேண்டும். எனவே அந்த கேக்கை வெட்டக்கூடாது என்கிற முடிவை நான் எடுத்தேன் என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment