டிரம்புக்கு புதிய சிக்கல்: உலக நாடுகளுக்கு வழங்கிய 8,700 வென்டிலேட்டர்கள் மாயம்

by Lifestyle Editor
0 comment

டொனால்டு டிரம்ப் நிர்வாகம் கொரோனாவை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு அனுப்பி வைத்த 8,722 இலவச வென்டிலேட்டர்கள் மாயமாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

டொனால்டு டிரம்ப் நிர்வாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ம் திகதி கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 43 நாடுகளுக்கு சுமார் 200 மில்லியன் டொலர்கள் மதிப்பில் வென்டிலேட்டர்களை இலவசமாக அனுப்பி வைத்தது.

ஆனால் தற்போது அந்த வென்டிலேட்டர்கள் எதையும் தங்களால் கண்டறிய முடியவில்லை என சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா தொடர்ந்து கடுமையான பொருளாதார விளைவுகளை எதிர்கொண்டு வருகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ள அந்த அறிக்கையில்,

மருத்துவ துறை சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட பெடரல் அமைப்புகளுக்கு 13 பரிந்துரைகளையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, எந்த நாடுகளுக்கு உண்மையில் வென்டிலேட்டர்கள் தேவை என்பது உள்ளிட்ட எந்த அடிப்படை ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் டிரம்ப் நிர்வாகம் செயல்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

வென்டிலேட்டர்கள் உருவாக்குவதில் அமெரிக்காவே எப்போதும் முதன்மையான இடத்தில் இருப்பதாக அறிவித்திருந்த டொனால்டு டிரம்ப்,

தற்போது அவரது நிர்வாகம் 43 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறும் 8,722 வென்டிலேட்டர்களுக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.

மேலும், நாளுக்கு 3 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்ட இலங்கைக்கு டிரம்ப் நிர்வாகம் 200 வென்டிலேட்டர்களை அளித்துள்ளதாகவும்,

ஆனால் நாளுக்கு 1,400 புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வந்த வங்காளதேசத்திற்கு வெறும் 100 வென்டிலேட்டர்கள் மட்டுமே டிரம்ப் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி கொரோனா பாதி8ப்புகளே பதிவாகாதா Nauru மற்றும் Kiribati உள்ளிட்ட குட்டி நாடுகளுக்கும் டிரம்ப் நிர்வாகம் வென்டிலேட்டர்களை தானமாக அளித்துள்ளது.

Related Posts

Leave a Comment